தமிழ்த்தேசிய நூல்களின் ஒருங்கிணைவு!

Shopping Cart Details


Order Details Amount
GRAND TOTAL:
அஞ்சல் கட்டணம் தனி

Please choose a checkout option.
No personal data required.

Send in Orders

It's Quick & Easy! Details here will not be published.

Please include messages to us here.

Checkout

Popular Posts

மறுமலர்ச்சி தமிழறிஞர்கள்

  


   

தமிழர் மறுமலர்ச்சியின் தொடக்கம் 19-ஆம் நூற்றாண்டு. அதன் வளர்ச்சி 20ஆம் நூற்றாண்டு. அந்த வளர்ச்சியின் மூலவர்கள் தமிழறிஞர்கள்!

இவர்கள் காலத்திலும், இவர்களுக்குப் பிந்தைய காலத்திலும் சிந்தனையாளர்களும் அறிஞர்களும் தமிழ் இனத்தில் தோன்றி இனம், மொழி, தாயகம், பண்பாடு, வாழ்வியல் முதலியவற்றிற்கான உரிமைக் குரல் கொடுத்தனர். இவர்களின் வாழ்க்கை வரலாறு, செயல்பாடுகள், பங்களிப்புகள் ஆகியவை பற்றி தமிழர் கண்ணோட்டம் இதழில் தோழர் கதிர்நிலவன் தொடர்ந்து எழுதி வருகிறார். அவற்றின் ஒரு பகுதி தொகுக்கப்பட்டு இப்பொழுது “மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்” நூலாக வெளி வருகிறது.

தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகச் செயற்களத்திற்குத் திராவிட இயக்கத் தலைவர்கள் வந்த பின்தான் தமிழர் மறுமலர்ச்சி தொடங்கியது என்பது போன்ற திரிபுகள் பரப்பப்பட்டுள்ளன. அதனால் தமிழர் மறுமலர்ச்சியைத் தொடங்கி வைத்த தமிழ்ச் சான்றோர்கள் பலரின் வாழ்க்கை வரலாற்றை _- அவர்களின் பங்களிப்புகளை இக்காலத் தமிழர்கள் உரியவாறு அறிந்து கொள்ளாத நிலை உள்ளது. இந்த அவலத்தைப் போக்கிட, தமிழ் உணர்வாளர்கள் பல முனைகளிலும் பங்களிப்புகள் வழங்கி வருகிறார்கள். அப்பங்களிப்பில் நம் தோழர் கதிர்நிலவன், தமிழர் கண் ணோட்டத்தில் எழுதி வரும் கட்டுரைகள் குறிப்பிடத் தக்கவை.

எளிய நடையில் ஓர் அறிமுகம் என்ற வகையில் சிறப்பாக நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வருகிறார் கதிர்நிலவன். மாணவர்களும் இளையோரும் இக்கட்டுரைகளைப் படிக்க வேண்டும்.

தமிழ்த்தேசியம் எழுச்சி பெற்று வரும் இக்காலத்தில், தமிழுக்கும் தமிழினத்திற்கும் தொண்டு செய்த நம் முன் னோர்கள் மீண்டும் புத்துயிர் பெறுகிறார்கள். தன் சொந்த இனத்தின் வரலாற்றுப் பெருமிதங்களை உணராத இனம், போற்றாத இனம் அயல் இனத்தார் திணிக்கும் அவர்களின் ஆதிக்க வரலாறுகளைச் சுமந்து அடிமை வாழ்வு நடத்திக் கொண்டிருக்கும்.

தமிழ்ச் சான்றோர் 19 பேரின் வரலாறுகள் இத் தொகுப்பில் உள்ளன. இவற்றுள் ஆங்கிலேய காலனிப் படை களை எதிர்த்து விடுதலைப் போர் நடத்தி வீரச்சாவடைந்த மருது பாண்டியர் வரலாறும் இருக்கிறது.


ஆசிரியர் - கதிர்நிலவன்
பக்கம்176
ரூ. 150.00
வாங்க
வெளியீடுபன்மைவெளி வெளியீட்டகம்
பதிப்பு2018
ISBN978-93-88546-07-2
விற்பனையில்

No comments yet. Add your comments now!

Post a Comment


 


Info Section Text

பன்மைவெளி