|
பழமொழிகள் என்பவை வெறும் சொலவடைகள் மட்டுமல்ல, நம் சமூகத்தின் பட்டறிவு சேமக் களஞ்சியங்கள் அவை!
மனிதகுலத்தின் நீண்ட வரலாறுள்ள எல்லா சமூகத்திலும் அச்சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப, அந்தந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள், தங்கள் வாழ்க்கை அனுபவங்களை - சமூக நிகழ்வுகளை பழமொழிகளாக சேமித்து வைத்து, அடுத்தத் தலைமுறையினர்க்கு அதை விட்டுச்செல்கின்றனர். தமிழ் பழமொழிகள் தமிழ்ச்சமூகத்தின் வாழ்வியல் வரலாற்றை பொதித்து வைத்துள்ள கருவூலம் ஆகும்! தமிழ் பழமொழிகள் தமிழ்ச்சமூகத்தின் உளவியல் அறிவை, அறம் சார்ந்த வாழ்வை, பல துறை அறிவுக் கூர்மையை வெளிப்படுத்துபவை ஆகும்! மக்கள் சார்ந்து தமிழின வரலாற்றை எழுத முற்படுவோர், தமிழ் பழமொழிகளை கூர்ந்து நோக்குவது அடிப்படைத் தேவையாகும். இப்பழமொழிகளில் எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் பயன்படுபவை; அவற்றுள் சில நம் காலத்திற்குப் பொருந்தாத பிற்போக்குத்தனமானவை! இதைப் பகுத்துப் பார்த்து, பழமொழிகளை அதன் உண்மைப் பொருளில் புரிந்து கொள்ளவே, பழமொழிகள் குறித்த ஆய்வுகள் நடக்கின்றன. |
|
|||
பக்கம் | 120 | ||
ரூ. 100.00 | |||
வாங்க | |||
வெளியீடு | பன்மைவெளி வெளியீட்டகம் | ||
பதிப்பு | 2018 | ||
ISBN | 978-81-938969-3-8 | ||
விற்பனையில் |
No comments yet. Add your comments now!
Post a Comment