தமிழ்த்தேசிய நூல்களின் ஒருங்கிணைவு!

Shopping Cart Details


Order Details Amount
GRAND TOTAL:
அஞ்சல் கட்டணம் தனி

Please choose a checkout option.
No personal data required.

Send in Orders

It's Quick & Easy! Details here will not be published.

Please include messages to us here.

Checkout

Popular Posts

தமிழீழம் இனி

  


   

தமிழீழத் தமிழர்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாத அரசும் சிங்கள இனவெறியர்களும் நடத்தும் இன ஒடுக்கு முறைகள் 2009 மே உடன் முடிவுக்கு வரவில்லை. பல்வேறு வடிவங்களில் இன்றும் தொடர்கிறது.

அண்மையில் சில நாட்களுக்கு முன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விசயகலா, “தமிழீழத் தமிழர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றச் செயல்களைப் பார்க்கும் போது விடுதலைப்புலிகள் மீண்டும் வந்தால்தான் அவர்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் போலிருக்கிறது” என்று கூறினார்.

சிங்கள அரசு, சிங்களப் படையாட்கள் மற்றும் சிங்களக் குற்றக் கும்பல் தமிழர்களுக்கு எதிராகச் செய்யும் அட்டூழியங்கள், கொஞ்சம் கூடக் குறையவில்லை!

வடக்கு, கிழக்கு மாநிலங்களில் இன்றும் சிங்களப் படை முற்றுகை தொடர்கிறது. சிங்களப்படையினர் வன்கவர்தல் செய்த தமிழர் காணிகள் சிலவற்றை திருப்பித் தந்துள்ளனர் என்பதைத் தாண்டி படையினர் சுற்றிவளைப்பும் கண்காணிப்பும் நீங்கவில்லை.

ஐ.நா. மனித உரிமை மன்றம் 2014 - 2015 ஆண்டுகளில் நிறைவேற்றிய தீர்மானங்கள், சிங்களப் படையாட்கள் மற்றும் அதிகாரிகள் செய்த “போர்க் குற்றங்கள்” மீது உரிய நடவடிக்கை எடுக்க போதுமானவையாக அமையவில்லை. ஆனால் அத் தீர்மானங்களைக் கூட இலங்கை அரசு செயல்படுத்தவில்லை!

இனப்படுகொலைக் குற்றவாளிகளாக உள்ள சிங்களர் யாரும் தண்டிக்கப்படவில்லை. போர் நிறுத்தம் செய்து வெள்ளைக் கொடி ஏந்தி அமைதிப் பேச்சுக்குப் போன விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்கள் அடைக்கப்பட்டுள்ள சிறைகள் எங்கே இருக்கின்றன என்று தெரியாது. அவர்கள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை. “காணாமல் போனோர்” பட்டியல் ஏராளம்!

இனப்படுகொலைக் குற்றவாளிகள் மீது ஐ.நா. மேற் பார்வையில் விசாரணையும் நடவடிக்கையும் தேவை - ஐ.நா. மேற்பார்வையில் தனி ஈழம் குறித்து கருத்து வாக்கெடுப்பு தேவை என்பவைதாம் இப்போது தமிழீழத்தில் உடனடிக் கோரிக்கைகள்! இதற்கான மக்கள் இயக்கம் அங்கு வளர்ந்து வருகிறது.

சமகாலத்தில் உலக அரங்கில் தமிழினத்தை உயர்த்தி வைத்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள், வியத்தகு போர் ஆற்றல் படைத்த விடுதலைப் புரட்சியாளர்; மாபெரும் மக்கள் தலைவர்; இளம் அகவையிலேயே ஒரு தேசத்தின் தந்தை ஆனவர்!

இந்தியாவின் வெறி கொண்ட செயல்பாடுகள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் குருதி வெள்ளத்தில் வீழ்த்திட, உலக நாடுகள் பலவற்றின் ஆதரவைத் திரட்டித்தந்தன. தங்க ளுக்குள் முரண்பட்டு நிற்கும் இந்தியாவும் - பாக்கித்தானும், இந்தியாவும் சீனாவும் சிங்கள இனவெறிப் போருக்குத் துணை நின்றன. தங்களுக்குள் முரண்பட்டு நிற்கும் அமெரிக்காவும் - இரசியாவும் தமிழீழ விடுதலைக்கு எதிராக ஒரே நிலையில் செயல்பட்டன.

இனப்படுகொலைப் போர் முடிந்த பிறகு நடந்த ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசைப் பாராட்டி இந்தியா தீர்மானம் கொண்டு வந்தது. அந்த இந்தியா இன்றும்  மாறிவிட வில்லை! 

தமிழ்நாட்டுத் தமிழர்கள் அவரிடமிருந்தும் விடுதலைப் புலிகளிடமிருந்தும் இலட்சிய உறுதியைக் கற்றுக் கொள்ள வேண்டும். போலிப் புனைவுகளால் போதையூட்டப்படும் தமிழ்நாட்டு அரசியல் தந்திரங்ளை அடையாளங்கண்டு அருவருக்கும் தெளிவைப் பெற வேண்டும். 

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமின்றி, ­ தமிழீழத் தமிழர்களுக்கும் இக்கட்டுரைகள் பலன் உள்ளவையாக இருக்கும்.






ஆசிரியர் : பெ. மணியரசன் 
கி. வெங்கட்ராமன்
பக்கம்176
ரூ. 150.00
வாங்க
வெளியீடுபன்மைவெளி வெளியீட்டகம்
பதிப்பு2018
ISBN978-81-938969-4-5
விற்பனையில்

No comments yet. Add your comments now!

Post a Comment


 


Info Section Text

பன்மைவெளி