தமிழ்த்தேசிய நூல்களின் ஒருங்கிணைவு!

Shopping Cart Details


Order Details Amount
GRAND TOTAL:
அஞ்சல் கட்டணம் தனி

Please choose a checkout option.
No personal data required.

Send in Orders

It's Quick & Easy! Details here will not be published.

Please include messages to us here.

Checkout

Popular Posts

தமிழ்மொழித் தொன்மை

  


   

“மொழி” என்பது என்ன?
மொழி - ஒரு தேசிய இனத்தின் உயிர்; ஒரு தேசத்தின் முகவரி; கழிந்துபோன காலத்தைப் பிடித்துச் சேமித்து வைக்கும் அதிசயக் களஞ்சியம்; ஒரு சமூகத்தின் கருத்துக் கருவூலம்; தொடர்பு நரம்பு மண்டலம்; மனிதப் படிமலர்ச்சியின் பாளிணிச்சல்; உயிரினங்களில் மனிதர்களுக்கு மட்டுமே வாய்த்த அமுதசுரபி!
கீழடி அகழ்வாய்வு தமிழ் மொழியின் அறிவியல் ஆழத்தையும், தமிழர்களின் செம்மாந்த நாகரிக வாழ்முறையையும் வெளிக்காட்டத் தொடங்கிய உடனேயே இந்தத் தொல்லியல் ஆய்வையே நிறுத்துவதற்கு இந்திய அரசு செளிணிது வரும் அத்துமீறல்கள் ஒருவகையில் தமிழ் மொழித் தொன்மை குறித்த அக்கறையை பரவலான மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.
ஒருபுறம், மார்க்சியர்கள் மற்றும் திராவிட இயக்கத்தவர் தாக்கத்தால் தமிழர்களிடையே தமிழ் மொழி குறித்த குறைப் பார்வை பரவி இருந்தாலும், இன்னொருபுறம் மொழியியல், மானுடவியல், கல்வெட்டியல், தொல்லியல் ஆகிய துறைகளின் ஆய்வரங்கங்கள் ‘உலகின் மூத்த மொழி தமிழ்’ என்பதை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகின்றன.
ஆரியவாதிகள் சிந்துவெளி நாகரிகத்தை சரசுவதி நாகரிகம் என ஆரியமயமாக்க முற்பட்டாலும், சிந்துவெளிக் காளையை கணினி வழி உருமாற்றி குதிரையாகத் திரித்துக் காட்ட முயன்றாலும் சிந்துவெளி குறித்த பல துறை ஆய்வுகள் அது தமிழர் நாகரிகமே என்பதை ஐயத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தி வருகின்றன.
தமிழர்களின் அறிவு மரபையும், அற மரபையும் தெரிந்து கொண்டு, எதிர்காலத் தமிழினத்திற்குத் திசைவழியை காட்ட விரும்புபவர்களுக்கு இந்நூலின் கட்டுரைகள் வலுவான அறிவாயுதங்களாகத் திகழும் என்பதில் ஐயமில்லை!
சிந்துவெளி தமிழர் நாகரிகத்துக்கு கி.மு. 3000 – 1750 என்னும் காலவரையறை செய்தனர். பின்னர் ஆப்கானித்தானத்தில் மெககார் என்னும் இடத்தில் நடத்திய அகழ்வாராய்ச்சியின் விளைவாக இதன் காலம் கி.மு. 6000 என்றனர்.
பக்கம்152
ரூ. 130.00
வாங்க
வெளியீடுபன்மைவெளி வெளியீட்டகம்
பதிப்பு2019
ISBN978-93-88546-20-1
விற்பனையில்

No comments yet. Add your comments now!

Post a Comment


 


Info Section Text

பன்மைவெளி