|
இலக்கியக் கடலைக் கடைய வகையற்ற மக்களுக்காகக் கண்ணதாசன் போன்ற ஒரு சில படைப்பாளிகள் மட்டும்தான் அதைக் கடைந்தெடுத்துக் கொண்டு நாவில் தடவுகிறார்கள். எத்தனைப் பேர் கம்பராமாயணத்தையும் கலித்தொகையையும் கலிங்கத்துப் பரணியையும் நளவெண்பாவையும் படித்திருக்கிறோம்? அந்தப் பெயர்களையாவது கேள்விப்பட்டிருப்பவர்கள் எத்தனை பேர்? எத்தனை பேர் திருக்குறளின் அத்தனை அதிகாரங்களையும் வாசித்து அர்த்தம் புரிந்து மெய்ம்மறந்து நின்றோம்? பள்ளியில் படித்த ஒரு சில குறள்கள் தவிர, பிறவற்றை நாம் அறிய முனைந்ததே இல்லை.
பள்ளியிலும் கூட முப்பாலில் மூன்றாம் பாலான இன்பத்தை ஒதுக்கிவிட்டு அறமும் பொருளும்தான் பாடமாக்கப்படும். காமத்துப் பாலில் காதலின் அத்தனைப் பரிமாணத் தையும் அழகாக அலசியிருக்கும் வள்ளுவரின் திறனை நாம் அறியாமலேயே போய்விடுகிறோம். திருக்குறள் மட்டுமல்ல, கடலென விரிந்து கிடக்கும் சங்க இலக்கியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் பலவற்றுள் இருக்கும் இலக்கியச்சுவை இன்னதென அறியாமலிருக்கிறோம்.
இலக்கியம் அறியாதோருக்காக, பல கவிஞர்களும் தங்கள் பாடல்களில் இலக்கியங்களை நயமாகப் புகுத்தி இலக்கிய நயத்தை நாம் அனுபவிக்கத் தந்திருக்கிறார்கள். ஆனால் எல்லோரைவிடவும் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பங்கு கூடுதலானது.
சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரை, பாரதியார் முதல் பட்டினத்தார் வரை தெளிவுரை, பதவுரையின் தேவைகளின்றி எளிதில் எவரும் விளங்கிக்கொள்ளும் வண்ணம் இனிய தமிழ்ச் சொற்களால் திரைப்பாடல்களின் வழியே இலக்கியத்தை எளிமையாக்கி அதைப் பாடல்களாக சமூகத்திற்குப் பாய்ச்சியவர் கவியரசு கண்ணதாசன் தான் என்பதை திரைப்பாட்டு வரலாறு அறியும்.
|
|||
பக்கம் | 176 | ||
ரூ. 150.00 | |||
வாங்க | |||
வெளியீடு | பன்மைவெளி வெளியீட்டகம் | ||
பதிப்பு | 2019 | ||
ISBN | 9789388546065 | ||
விற்பனையில் |
No comments yet. Add your comments now!
Post a Comment