தமிழ்த்தேசிய நூல்களின் ஒருங்கிணைவு!

Shopping Cart Details


Order Details Amount
GRAND TOTAL:
அஞ்சல் கட்டணம் தனி

Please choose a checkout option.
No personal data required.

Send in Orders

It's Quick & Easy! Details here will not be published.

Please include messages to us here.

Checkout

Popular Posts

தமிழ்த்தேசியம்: பன்முகப் பார்வைகள் - பாகம் - 1

  


   

தமிழ்த்தேசியம் என்பது ஒரு குறிப்பிட்ட தாயகத்தில் வாழும் தமிழ்ச் சமூகத்திற்கான அரசியல், பொருளியல், மெளிணியியல், பண்பியல் உள்ளிட்ட பல்வேறு வாழ்நெறி களை உள்ளடக்கியது. வெளி மாநிலங்களில், வெளி நாடுகளில் வாழும் தமிழர்களின் உரிமைகள், நலன்கள் குறித்த பொறுப்பும் தமிழ்த்தேசியத்திற்கு உண்டு.

பிரித்தானிய ஆட்சியில் தமிழக, ஆந்திர, கேரளப் பகுதிகளைக் கொண்டிருந்த அன்றைய சென்னை மாகாணத்தில் தோன்றிய பிராமணர் ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்திற்கு ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் சூட்டிக் கொண்டது அன்றைய சூழ்நிலையையும் நிறுவனர்களின் தேவையையும் பொறுத்ததே ஆகும். அதற்கு மேல் அப்பெயரில் முக்கியத்துவம் எதுவும் இல்லை, தனித்தன்மை எதுவுமில்லை. அப்பெயருக்கான மொழி, இன அடிப்படையில் அமைந்த வரலாற்றுக் காரணங்கள் எதுவுமில்லை.

சமூக அறிவியலைப் பின்பற்றும் நேர்மையாளர்கள், மார்க்சிய - லெனினியத்தை ஏற்றுக்கொண்ட நேர்மையான கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவை ஒரு தேசம் என்று கூற மாட்டார்கள். ‘இந்தியர்’ என்று ஒரு தேசிய இனம் இருப்பதாகவும் கூற மாட்டார்கள். இந்திய தேசிய இனம், இந்திய தேசம் என்று மார்க்சிய - லெனினியத்தை ஏற்றுக் கொண்டோர் பேசினால் அவர்கள் காங்கிரஸ் - பா.ச.க கம்யூனிஸ்ட்டுகள் ஆவர், கவரிங் தங்க நகை போல!

“வெளியாரை வெளியேற்றுவோம்” என்ற நமது முழக்கமும் அதற்கானப் போராட்டமும் பாசிசம் ஆகாது. தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக நீடிக்கக் கூடாது என்பதுதான் பாசிசம்! மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்ட 1956-க்குப் பின், தமிழ்நாட்டில் மிகை எண்ணிக்கையில் குடியேறி தமிழ் மக்களின் தாயக உரிமை, தொழில், வேலைவாளிணிப்பு போன்றவற்றைப் பறித்து ஆக்கிரமிக்கும் வேற்று இனத்தாரைத் தான் வெளியேற்றக் கோருகிறோம். மற்றபடி தமிழகத்தில் நூற்றுக்கு நூறு தமிழர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறவில்லை. 


ஆசிரியர்

ஆசிரியர் - பெ. மணியரசன்
பக்கம்168
ரூ. 150.00
வாங்க
வெளியீடுபன்மைவெளி வெளியீட்டகம்
பதிப்பு2020
ISBN
விற்பனையில்

No comments yet. Add your comments now!

Post a Comment


 


Info Section Text

பன்மைவெளி