|
மனிதனைப் போலவே புத்தகமும் ஒரு வாழ்வின் தோற்றமாகும். அதற்கும் உயிருண்டு; அதுவும் பேசும்; “எழுத்தாளனுக்கு அலாதியான நுண்ணிய பார்வை வேண்டும். மற்றவர்களால் பார்க்க முடியாதவற்றை நுணுக்கமாகப் பார்த்துக் குறித்துக் கொள்ளும் திறன்வேண்டும். கச்சிதமான வளமான நடைவேண்டும். கூர்மையாகக் கவனிக்கும் கண்களும், ஒருமைப்பாடுகளையும் ஆழ்ந்து கவனித்தறியும் ஆற்றலும், இடையறாத முடிவில்லாத பயிற்சியும் இருந்தால்தான் மாதிரிப் படைப்புகளாக உஷீமீள மனிதர்களைப் பற்றி பளிச்சென சித்தரித்துத் தர முடியும்.” என்று மாக்சிம் கார்க்கி எழுத்துப்பற்றி எடுத்துரைப்பார்.
அப்படித்தான், சமூகப்புறத்தில் புலப்படும் கூறுகளைக் கண்ணுற்கி, அதை தன் அகத்தில் அடைக்காத்து, உயிர்ப்பான படைப்பு வடிவமாக வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன். எழுத்து சமூகத்தின் சாரளங்களை ஓசையோடு திறக்கிற விடுதலைத்திறவுகளாகவேண்டும். எனது எழுத்தும் அத் திறவுகோல் தயாரிக்கும் சிறு துரும்பாக இருக்கும் என நம்புகிறேன்! நான் நசுக்கப்படும்போது திமிறி எழவே செளிணிவேன்! என்று தமது எழுத்து எழவேண்டும்!. அப்படியாக எழுந்ததுதான் இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளும். இன உரிமை அனைத்தும் இழந்து அடிமை நிலையில் அல்லல் படுகின்ற சமகாலத்தில் உரிமைக்குரலின் ஓசை இந்நூலில் படித்துணரும்போது உங்கள் செவிப்பாறையில் வந்து மோதும்! இழந்த தமிழக உரிமைகளை மீட்க இந்நூலில் உள்ள ஏதோ ஒரு கட்டுரையாவது அதிகாரங்களின் கடிவாளத்தைக் கழட்டும்! |
|
||||
பக்கம் | 184 | |||
ரூ. 150.00 | ||||
வாங்க | ||||
வெளியீடு | தமிழர் தாயகம் வெளியீடு | |||
பதிப்பு | 2019 | |||
ISBN | ||||
விற்பனையில் |
No comments yet. Add your comments now!
Post a Comment