|
தமிழ் மொழி உரிமை, தமிழர் மண்μரிமை ஆகியவற்றை
பாதுகாத்துக் கொள்ள தமிழினம் நடத்தி வரும் அனைத்து முனைப்
போராட்டங்களிலும், அனைத்து வகை
முயற்சிகளிலும் தமிழர்
ஆன்மிகம் தனது வலுவான பங்கை ஆற்றி வருகிறது.
தமிழர் வழிபாட்டு நெறியின் மீதும், வழிபாட்டுத் தலங்கள் மீதும்
அயலார் ஆதிக்கம் செளிணிய ஆண்டாண்டுகளாக முயன்றாலும்,
தமிழினம் வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும், இந்த ஆதிக்க
முனைப்புகளுக்கு எதிராகப் போராடி தனது அற மரபை தக்க
வைத்துக் கொண்டிருக்கிறது.
எல்லா சிந்தனை மரபுகளிலும் இருப்பதுபோலவே தமிழர்
வரலாற்றிலும், பல்வேறு ஆன்மிக
நெறிகளுக்கிடையில் போட்டி
களும் மோதல்களும் நிகழ்ந்தே இருக்கின்றன.
ஆயினும், இவற்றின் ஊடாக தமிழ் மொழியையும், இந்த
மண்ணின் நெறியையும் நிலை நிறுத்தும் முயற்சிகளும் தொடர்
கின்றன. இன்று, இந்த நவீன காலத்திற்கே
உரிய வாய்ப்பு களைப்
பயன்படுத்தி, ஒற்றை ஆரியப்
பண்பாட்டை தமிழ் மண்ணில் திணிக்க
தீவிர முயற்சிகள் நடக்கின்றன.
தங்கள் தங்கள் தனி நெறியை வலுப்படுத்தும் முயற்சிகளின்
ஊடாக ஆரிய ஆன்மிக ஆதிக்கத்தை முறியடிக்கும் ஒற்றைப்
புள்ளியில் ஒன்றிணைய வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.
சைவம், வைணவம், ஆசீவகம், சமணம், சித்தர் மரபு, இசுலாம்,
கிறித்துவம் போன்ற பன்மைத்தன்மையில் உள்ள தமிழர் ஆன்மிகம்
இந்த அயல் ஆதிக்கத்திற்கு எதிராக, ஒத்த குரலில் பேசுவதை
|
|
|||
பக்கம் | 240 | ||
ரூ. 175.00 | |||
வாங்க | |||
வெளியீடு | பன்மைவெளி வெளியீட்டகம் | ||
பதிப்பு | 2020 | ||
ISBN | 978938856058 | ||
விற்பனையில் |
No comments yet. Add your comments now!
Post a Comment